தமிழக செய்திகள்

பெயிண்டிங் காண்ட்ராக்டரிடம் கத்தி முனையில் வழிப்பறி - 10 பேர் கைது

10 பேர் கொண்ட கும்பல் ஜெகன் நாதனிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.5400 ரொக்கம் மற்றும் கைக்கடிகாரத்தை பறித்து சென்றது.

சென்னை,

பெயிண்டிங் காண்ட்ராக்டரிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை புழல் அருகே கண்ணகி நகரை சேர்ந்தவர் ஜெகன் நாதன் (வயது 60). பெயிண்டிங் காண்ட்ராக்டரான இவரிடம் புழல் பகுதியில் 10 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ.5400 ரொக்கம் மற்றும் கைக்கடிகாரத்தை பறித்து சென்றது.

10 பேர் கைது

இது குறித்து ஜெகன் நாதன் சென்னை புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 10 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT