குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில், குஜராத்துக்கும் பாகிஸ்தானின் சிந்து மாகா ணத்துக்கும் இடைப்பட்ட கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஒரு குறுகிய சதுப்பு நிலம் நிறைந்த நீர்வழி பாதையில் சிலர் நடமாடுவதாக எல்லை பாதுகாப்பு படை யினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்று அந்த பகுதியில் நண்டு பிடித்து கொண்டு இருந்த பாகிஸ்தானை சேர்ந்த 4 மீனவர்களை கைது செய்தனர்.
பாகிஸ்தான் மீனவர்கள் நண்டுகளை பிடிப்பதற்காக இந்திய எல்லைக்குள் நுழைந்து உள்ளனர். இந்த நடவடிக்கையின் போது, அவர்களின் மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டது.டும்போது லுகை ஏன்?"கைது செய்யப்பட்டவர்கள் காதிர் தைமூர், முகமது முசா, அஸ்கர் தைமூர், அஹ் சன் ஜாட் என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தா னின் சிந்து மாகாணத்தில் உள்ள சச்ஜான்கான் என்ற கிராமத்தை சேர்ந்தவர்கள் என்று எல்லை பாதுகாப்பு படை தெரிவித்தது.