தமிழக செய்திகள்

பழனி நிலம் மோசடி வழக்கு: சிபிசிஐடி நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரை,

பழனி இடம் மோசடி தொடர்பான பத்திரப்பதிவு விவகார விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், வழக்கின் தற்போதைய நிலை குறித்து சிபிசிஐடி தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.

மனு தாக்கல்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபால், அன்னபூரணி சிவக்குமார் மற்றும் பழனி நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி பிரதீப் ஆகியோர், பழனி கோவில் இட பத்திரப்பதிவு தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் எனக்கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

உத்தரவு

இந்த மனு, நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் தற்போதைய நிலை குறித்து சிபிசிஐடி தரப்பில் விரிவான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.