தமிழக செய்திகள்

பல்லடம் பஸ் நிலைய உயர் கோபுர மின்விளக்குகள் சீரமைப்பு

பல்லடம் பஸ் நிலையத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின் விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியாமல் இருந்ததால் அந்த பகுதியில் இரவு நேரம் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பஸ் நிலையத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின் விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியாமல் இருந்தது. இதனால் அந்த பகுதியில் இரவு நேரம் இருள் சூழ்ந்து காணப்பட்டது.

பயணிகளும் அச்சத்துடன் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து நின்றனர். இந்த நிலையில் மின்விளக்குகள் எரியாதது குறித்து தினத்தந்தியில் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக அதிகாரிகள், உடனடி நடவடிக்கை எடுத்து பழுதான உயர் மின் கோபுர விளக்குகளை சரி செய்தனர்.

இதனால் உயர்கோபுர மின் விளக்குகள் பிரகாசமாக எரிய தொடங்கியது. இதையடுத்து, நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.