தமிழக செய்திகள்

பாம்பன் அருகே 77 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது

படகிலிருந்த சுமார் 77 கிலோ கஞ்சாவை இந்திய கடலோர காவல் படை பறிமுதல் செய்தது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே இந்திய கடலோர காவல் படையினர் 77 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பாம்பன் அருகே படகில் கஞ்சா கடத்துவதாக இந்திய கடலோர காவல் படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோரக் காவல் படை, திருச்சியில் உள்ள சுங்கத்துறையின் மத்திய புலனாய்வுப் பிரிவுடன் (Customs Central Intelligence Unit) இணைந்து, நேற்று பாம்பன் அருகே சோதனை நடத்தினர்.

அப்போது அங்கே இருந்த ஒரு படகையும், அதில் இருந்த இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அந்த படகிலிருந்து சுமார் 77 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள், படகு மற்றும் பிடிபட்ட நபர்கள் மண்டபத்திற்குக் கொண்டு வரப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்காகச் சுங்கத்துறையின் மத்திய புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT