கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

நீலகிரியில் பரபரப்பு: பள்ளி வளாகத்தில் புகுந்து நாய்களை வேட்டையாடிய சிறுத்தை

ஒரு நாயை கவ்வி சென்று சிறுத்தை அங்கிருந்து சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

நீலகிரி,

பள்ளி வளாகத்தில் புகுந்து நாய்களை வேட்டையாடிய சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 10-ந்தேதி பள்ளி வளாகத்திற்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. பின்னர், அங்கிருந்த 3 நாய்களை வேட்டையாட தொடங்கியது. இதில், ஒரு நாயை மற்றும் கவ்விக்கொண்டு சிறுத்தை அங்கிருந்து சென்றது. பள்ளி மாணவர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவானது. மேலும், சிறுத்தையை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பள்ளி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. பள்ளி வளாகத்தில் நாய்களை வேட்டையாடி சென்ற சிறுத்தையால் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT