தமிழக செய்திகள்

தானம், பாகப்பிரிவினைக்கு காகிதமில்லா பத்திரப்பதிவு- நவம்பர் 2 முதல் அமல்: தமிழக அரசு அறிவிப்பு

புதிய திட்டங்களில் வீடு, மனை விற்பனை பத்திரங்களை சார்-பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பதிவு செய்யும் திட்டம் ஆகஸ்ட் 17 முதல் அமலுக்கு வந்தது.

சென்னை,

தமிழகத்தில் செட்டில்மென்ட், பாகப்பிரிவினை, விடுதலை தொடர்பான பத்திரங்களை காகிதமில்லா முறையில் பதிவு செய்யும் திட்டம், நவம்பர் 2 முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தானம், பாகப்பிரிவினைக்கு காகிதமில்லா பத்திரப்பதிவு

புதிய திட்டங்களில் வீடு, மனை விற்பனை பத்திரங்களை சார்-பதிவாளர் அலுவலகம் செல்லாமல் பதிவு செய்யும் திட்டம் ஆகஸ்ட் 17 முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, தானப்பத்திரம், பாகப்பிரிவினை, விடுதலை, தானம் ரத்து ஆகிய பத்திரங்களை பதிவு செய்வது, 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் வரும் 15 முதல் அமலுக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

நவம்பர் 2 முதல் அமல்; தமிழக அரசு அறிவிப்பு

இந்த நிலையில் இந்த நான்கு வகை பத்திரங்களையும் காகிதமில்லா முறையில் பத்திரப்பதிவு செய்யும் திட்டத்துக்கான கணினி மென்பொருள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இத்திட்டம் வருகிற நவம்பர் 2-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை பதிவுத்துறை செயலர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார். பதிவுத்துறையின் 'ஸ்டார் 3.0' மென்பொருளில் இதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT