தமிழக செய்திகள்

வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததால் கண்டித்த பெற்றோர் - வாலிபர் எடுத்த விபரீத முடிவு

வாலிபரை பெற்றோர் கண்டித்து வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை குமரேசன் நகரை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் மனோ (21 வயது). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக இவர், சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதை கண்டித்த அவரது பெற்றோர் வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மனோ வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் கண்விழித்த குடும்பத்தினர், வாலிபர் தூக்கில் பிணமாக தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற கழுகுமலை போலீசார் அவரது உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.