தமிழக செய்திகள்

25 ஆண்டு சிறை கைதிகளுக்கு மீண்டும் பிணை விடுப்பு - அமைச்சர் ஷாஜகான் தகவல்

நிதிநிலை அறிக்கையில் கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களுக்கு கூடுதல் திட்டங்கள் அறிவிக்கப்படும்.

விருதுநகர்,

விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் கூறியதாவது:-

கூடுதல் திட்டங்கள் அறிவிக்கப்படும்

சிறுபான்மையினருக்கு அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் சரியாக சென்றடைகிறதா என, ஆய்வு நடத்தப்படுகிறது. நிதிநிலை அறிக்கையில் கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களுக்கு கூடுதல் திட்டங்கள் அறிவிக்கப்படும்.

மீண்டும் 2 மாத பிணை விடுப்பு

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அரசு செயல்படுத்தவிருக்கும் 'வெற்றி தமிழகம்' என்ற தொலைநோக்கு திட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கான சிறப்பு திட்டங்கள் சேர்க்கப்படும். 25 ஆண்டுகள் கடந்து சிறையில் வாடும் கைதிகளுக்கு தேர்தல் நடத்தை விதிகளால் நிறுத்தப்பட்டிருந்த 2 மாத பிணை விடுப்பு மீண்டும் வழங்கப்படும்.

கோரிக்கை

அவர்களின் நிரந்தர விடுதலைக்கும், தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது. எங்கள் ஆட்சி, லஞ்சம், ஊழல் இல்லாத மக்களும் விரும்பும் ஆட்சியாக இருக்கும். தற்போது முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் 3.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.