தமிழக செய்திகள்

தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி பணிநிரந்தரம் செய்ய வேண்டும் : பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஒரே கல்வித்தகுதி உடைய, ஒரே பாடங்களில் பணிபுரியும் உடற்கல்வி ஓவியம் கணினிஅறிவியல் தையல் இசை ஆசிரியர்களுக்கு சமவேலை சமஊதியம் வழங்க வேண்டும்.

சென்னை,

16 கல்வியாண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிகின்ற பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தவிக்கின்ற, 11,773 ஆசிரியர்கள் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முதல்வர் விஜய் காலமுறை வேண்டும் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்.

15 ஆயிரம் சம்பளம்

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையில் 2011-2012 ஆம் கல்வியாண்டில் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி ஓவியம் கணினிஅறிவியல் தையல் இசை தோட்டக்கலை கட்டிடக்கலை வாழ்க்கைக்கல்வி ஆகிய பாடங்களில் நியமித்த 16,549 பேரில் தற்போது 11,773 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றார்கள். 15 கல்வியாண்டுகளை கடந்த நிலையிலும் தற்காலிக வேலையை நிரந்தரமாக்காமல் தற்போதும் ரூபாய் 15 ஆயிரம் சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது.

சமவேலை சமஊதியம்

இதே பாடங்களின் சிறப்பாசிரியர்களை போலவே காலமுறை சம்பளம் வழங்கி இந்த 11,773 தற்காலிக ஆசிரியர்களையும் தமிழக அரசு பணிக்கு ஈர்க்க வேண்டும். ஒரே கல்வித்தகுதி உடைய, ஒரே பாடங்களில் பணிபுரியும் உடற்கல்வி ஓவியம் கணினிஅறிவியல் தையல் இசை ஆசிரியர்களுக்கு சமவேலை சமஊதியம் வழங்க வேண்டும்.

தேர்தல் வாக்குறுதி

தவெகவின் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர்களில் 5 வருடங்களை நிறைவு செய்து இருப்பவர்கள், நிரந்தர ஆசிரியர்களாக மாற்றப்படுவார்கள் என்பதை நிறைவேற்றும் விதமாக முதல்வர் விஜய் இதை அரசு கொள்கை முடிவு என இந்த முதலாவது சட்டசபை கூட்டத் தொடரிலே அறிவிக்க வேண்டும்.