கும்மிடிப்பூண்டி,
சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் தடா மற்றும் சூலூர்பேட்டை ரெயில் நிலையத்தில் வருகிற 28 மற்றும் அக்டோபர் 2, 5 ஆகிய தேதிகளில் இரவு 11.35 மணி முதல் காலை 7.05 மணி வரையில் (7 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* சென்னை சென்டிரலில் இருந்து இன்று (26-ந்தேதி), 29, அக்டோபர் 3, 6 ஆகிய தேதிகளில் அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில் எளாவூர்-சூலூர் பேட்டை இடையேயும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்டிரல் வரும் மின்சார ரெயில் சூலூர்பேட்டை-எளாவூர் இடையேயும் பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை சென்டிரலில் இருந்து மேற்கண்ட தேதியில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில் தடா-சூலூர்பேட்டை இடையேயும், மறுமார்க்கமாக. சூலூர்பேட்டையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின் சார ரெயில் சூலூர்பேட்டை- தடா இடையேயும் பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.