சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் பேரனி பணிமனையில் பராமரிப்புப் பணி மேற்கொள்ள இருப்பதால் தாம்பரத்தில் இருந்து இன்று (10-ந்தேதி) காலை 9.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் (வண்டி எண்.66045), திண்டிவனம்-விழுப்புரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
விழுப்புரத்தில் இருந்து இன்று மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் பயணிகள் ரெயில் (66046), விழுப்புரம்-திண்டிவனம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, திண்டிவனத்தில் இருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.