தமிழக செய்திகள்

அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தனிக்கட்சி தொடங்கப்படும் ஆலோசனை கூட்டத்தில் ரஜினிகாந்த் பேச்சு

அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தனிக்கட்சி தொடங்கப்படும் என்று மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

சென்னை,
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள் மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்த கருத்துகளை கேட்டறிந்தார். பின்னர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் நமது இலக்கு அல்ல. 2017-ல் அரசியல் அறிவிப்பை வெளியிடும் போதே சட்டமன்ற தேர்தல் தான் நமது இலக்கு என்பதை தெளிவாக கூறியிருந்தேன். நமது இயக்கம் வித்தியாசமானது. நிர்வாகிகள் யாரும் பணம், பதவியை எதிர்பார்த்து இருக்கக்கூடாது. அப்படி எதிர்பார்ப்பவர்கள் யாராவது இருந்தால், அவர்கள் இப்போதே இங்கிருந்து வெளியேறி விடலாம்.