தமிழக செய்திகள்

‘பாஸ்போர்ட்டு’ விண்ணப்ப கட்டணம் அதிகரிப்பு- ஜூலை 1-ந்தேதி முதல் அமல்

ஜூலை 1 முதல் 36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1500 லிருந்து ரூ.2500 ஆக அதிகரிப்பு

வேலை, படிப்பு, சுற்றுலா போன்ற காரணங்களுக்காக வெளிநாடுகள் செல்வோர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் ‘பாஸ்போர்டு’க்காக தினந்தோறும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பாஸ்போர்ட் விண்ணப்ப கட்டணத்தை மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் ஜூலை 1-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

எவ்வளவு உயர்வு?

அதன் விவரம் வருமாறு:-

36 பக்கங்கள்(சாதாரண விண்ணப்பம்) - ரூ.1,500(தற்போதைய கட்டணம்) - ரூ.2,500(புதிய கட்டணம்)

36 பக்கங்கள் (தட்கல் விண்ணப்பம்)- ரூ.3,500- ரூ.5,000

60 பக்கங்கள்(சாதாரணம்)- ரூ.2,000- ரூ.3,500

60 பக்கங்கள்(தட்கல் )- ரூ.4,000- ரூ.6,000

36 பக்கங்கள்(18 வயதுக்குட்பட்டவர்கள்)- ரூ.1,500- 1,750

36 பக்கங்கள்(தட்கல்) -ரூ.3,500- ரூ.4,250