சென்னை,
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளுவரை இன்று நினைவில்கொண்ட பா.ஜ.க. தலைவர்களுக்கு ஒரு குறளைப் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன். வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம் யாம் என்னும் செருக்கு. 50 நாட்களாக கடுங்குளிரில் நடைபெறும் விவசாயிகள் அறப்போராட்டத்தில் உள்ள ஒண்மையை பா.ஜ.க. அரசு புரிந்துகொள்ளுமா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.