சென்னை,
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக சுமார் 3 மாத கால இடைவெளிக்குப்பிறகு சென்னை மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், மின்தடை குற்றச்சாட்டு, சென்னை மாநகர பள்ளி நிர்வாக நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாமன்ற கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்படும் மின்வெட்டுகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் வருத்தப்படுகின்றனர். திமுகவின் தோல்வி தற்காலிகமானதுதான்’ என்றார்.
இதனிடையே, மாமன்ற கூட்டத்தின்போது திமுக - அதிமுக கவுன்சிலர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக கவுன்சிலர் மீது திமுக கவுன்சிலர் பேப்பரை எடுத்து வீசிய சம்பவத்தால் மாமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதேவேளை, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வெளிநபர்கள் உணவு தரக்கூடாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத யாரும் பள்ளி தலைமை ஆசிரியர் அனுமதி பெறாமல் இனிப்பு உள்ளிட்ட எதையும் மாணவர்களுக்கு வழங்க கூடாது என்று மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்தில் தவெகவினர் மாநகராட்சி பள்ளியில் கட்சி துண்டு அணிந்து மாணவர்களுக்கு உணவுகளை வழங்கினர் என்பது குறிப்பிடதக்கது