தமிழக செய்திகள்

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தி.மு.க.வுக்கு மக்கள் தகுந்த தீர்ப்பு வழங்குவார்கள் - மரிய வில்சன்

பொதுமக்கள் அனைவரும் அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் என அமைச்சர் மரியவில்சர் கூறியுள்ளார்.

நெல்லை,

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க. ஆதரவு அளித்துள்ளது தொடர்பாக, தி.மு.க. எடுத்துள்ள முடிவுக்கு மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

நெல்லையில் அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க. ஆதரவு அளித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

காலம்தான் பதில் சொல்லும்

இதற்கு பதில் அளித்த அமைச்சர் மரிய வில்சன், "இதற்கு காலம்தான் பதில் சொல்லும். தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு, கிராமப்புறங்களில் உள்ள சாதாரண சிறிய கடைகளில் கூட அரசியல் குறித்து மக்கள் பேசத் தொடங்கியுள்ளனர். பொதுமக்கள் அனைவரும் அரசியலை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

தி.மு.க. எந்த மாதிரியான மனப்பக்குவத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு வருங்காலத்தில் மக்கள் தகுந்த தீர்ப்பை வழங்குவார்கள்" என்றார்.

மக்கள் பதிலடி கொடுப்பார்கள்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் மரிய வில்சன், "அப்படிப்பட்ட எண்ணத்தில் தி.மு.க. ஆதரவு அளித்திருந்தால், அதற்கு மக்கள் தகுந்த பதிலடியை கொடுப்பார்கள்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT