தமிழக செய்திகள்

பெரம்பலூர்: மகளுக்கு பாலியல் தொல்லை; தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

பெரம்பலூர் மாவட்டத்தில் 4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 43 வயது டி.வி. மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் 4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மகளுக்கு பாலியல் தொல்லை

பெரம்பலூர் மாவட்டத்தில் 4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 43 வயது டி.வி. மெக்கானிக்கை போலீசார் கடந்த 2022-ம் ஆண்டு கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த பெரம்பலூர் மகிளா கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.

தந்தைக்கு 20 ஆண்டுகள் சிறை

குற்றம் உறுதி செய்யப்பட்டதால் மெக்கானிக்கிற்கு போக்சோ சட்டத்தின் கீழ் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தது. தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டதால் 20 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும்.

SCROLL FOR NEXT