திருச்சி
பெரம்பலூர் அருகே கார் விபத்தில் த.வெ.க. எம்.எல்.ஏ. உயிர் தப்பினார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. நவல்பட்டு விஜி. இவர் நேற்று முன்தினம் சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொண்டு விட்டு சென்னையில் இருந்து காரில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
பெரம்பலூர் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது, கள்ளக்குறிச்சியில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி நெற்கதிர் அறுக்கும் எந்திரத்தை ஏற்றி வந்த லாரி நவல்பட்டு விஜி எம்.எல்.ஏ.வின் காரின் பின்பக்கத்தில் மோதியது.
இந்த விபத்தில், கார் சிறிது சேதமடைந்தது. காரில் அமர்ந்திருந்த நவல்பட்டு விஜி எம்.எல்.ஏ. மற்றும் அவருடன் வந்தவர்கள் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.