கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பேரறிவாளளின் பரோல் 5-வது முறையாக நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

பேரறிவாளனுக்கு 5-வது முறையாக பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் என அரசுக்கு அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த மே மாதம் 28ந்தேதி ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு சென்றார். வீட்டில் இருந்தபடி சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்னைகளுக்கு பேரறிவாளன் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த சூழலில் கடந்த ஜூன் மாதம் 28ந்தேதி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து பரோல் நீட்டிக்கப்பட வேண்டும் என்ற அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு நான்கு முறை பரோல் நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து இன்றுடன் பேரறிவாளனுக்கு பரோல் முடிய உள்ளது.

இந்த நிலையில் 5வது முறையாக பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. பேரறிவாளளின் உடல்நலன் கருதி சிறை விடுப்பை அக்டோபர் 26-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

SCROLL FOR NEXT