சென்னை,
முரசு புயலின்போது உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பத்தை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ஆளும் தவெக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலேயே இந்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. புயல் வரும் சமயத்தில் மீனவர்களைக் கடலுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது.
அதே நேரத்தில், கூண்டில் ஆபத்தை உணர்த்தும் கொடியை ஏற்றியிருக்க வேண்டும். ஆனால், இது போன்ற எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தவெக அரசு மேற்கொள்ளவில்லை.
கடந்த திமுக ஆட்சியின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டது. ஆனால், இந்த தவெக அரசு மீனவர்கள் மீது எந்தவித அக்கறையும் எடுத்துக்கொள்ளவில்லை.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி அரசு அறிவித்துள்ளது. இந்த இழப்பீட்டுத் தொகை போதாது, மாறாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இறந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது என கூறினார்.
மேலும் தொடர்ந்து பெரியார் நூலக முறைகேடு குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த உதயநிதி
பெரியார் அறிவுலக புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக முறையான விசாரணைக்கு நாங்கள் தயார். திமுக ஆட்சியில் புத்தக கொள்முதலில் முறைகேடு நடந்திருக்க 100 சதவீதம் வாய்ப்பில்லை.புத்தக ஆசிரியர்களின் பெயர்களை வைத்தே அது இந்த ஆட்சியில்தான் கொள்முதல் செய்யப்பட்டது என்பதை சொல்லலாம் என்றார்.