தருமபுரி,
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் காரணமாக நீர்வரத்து அதிகரித்து மேட்டூர் அணை நீர்மட்டம் 92 அடியை தாண்டியது. இதையடுத்து கடந்த 1-ந் தேதி முதல் காவிரி டெல்டா பாசனத்துக்கும், நேற்று முன்தினம் மதியம் முதல் கிழக்கு, மேற்கு கால்வாய் கரையோர மக்களுக்கு குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நீர்வரத்து குறைந்ததை தொடர்ந்து ஒகேனக்கல்லில் மீண்டும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. கடந்த 24 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து பரிசல் ஓட்டிகள் பரிசல்களை இயக்கத் தொடங்கினர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பரிசல் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பரிசலில் பயணம் செய்தனர். இதனால் ஒகேனக்கல் சுற்றுலாத்தளத்தில் மீண்டும் பரிசல் பயணம் களைகட்டத் தொடங்கியுள்ளது.