மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே ஆங்கிலேயர் காலம் முதல் இயக்கப்பட்டு வரும் பாரம்பரிய மலை ரயில், சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது. நேற்று இரவு குன்னூர், கோத்தகிரி மற்றும் ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக, நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் நோக்கிச் செல்லும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மலை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீலகிரி மலை ரயில் வழித்தடத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகவும் ஹில்குரோவ் மற்றும் குன்னூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் ரயில் பாதைகளில் மண்சரிவு ஏற்பட்டுப் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. இதனால், பயணிகளின் பாதுகாப்பு கருதி, நாளை (திங்கட்கிழமை) மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே இயக்கப்படும் பின்வரும் மலை ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் விவரம்
UP 56136
DN 56137
DN 06172