தமிழக செய்திகள்

தொடரும் கனமழை.. குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை

குற்றால அருவி பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தென்காசி,

தமிழகத்தில் எத்தனையோ இடங்களில் அருவிகள் இருந்தாலும், அருவிகள் நிறைந்த சுற்றுலா தலம் குற்றாலம் தான். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியான தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தென்மேற்கு பருவமழை காலத்தில் நீர்வரத்து இருக்கும்.

தென்காசி

இந்த சூழலில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. குற்றாலத்திலும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. அருவி பகுதிகளில் சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

குற்றாலம்

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடரும் கனமழையால் குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்படி குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வார விடுமுறையொட்டி அருவிகளில் குளிக்க வந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.