தமிழக செய்திகள்

பெரும்பாக்கத்தில் குப்பைகள் எரிப்பு; 2,500 ஆண்டு பழமை வாய்ந்த தொல்லியல் தடத்திற்கு பாதிப்பு

பெரும்பாக்கத்தில் தொல்லியல் சிறப்பு வாய்ந்த பாதுகாக்கப்பட்டப் பெரும் கற்காலத்தடம் ஒன்று உள்ளது.

சென்னை,

சென்னையின் சுற்றுப்புறத்தில் உள்ள, பெரும்பாக்கம் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் இருக்கும் திறந்தவெளி காட்டுப்பகுதிகளில், குப்பைகளை கொட்டுவதும் அவற்றை எரிப்பதுமாக உள்ளது. இது பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதியாகும்.

இந்த காடுகளில், 2,500 ஆண்டுகள் பழமையான, தொல்லியல் சிறப்பு வாய்ந்த பாதுகாக்கப்பட்டப் பெரும் கற்காலத்தடம் ஒன்று உள்ளது. இந்த தடம், பாதிப்புக்குள்ளாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வெயில் காலங்களில் குப்பைகளை காட்டுப்பகுதியில் எரிப்பதால், காட்டுத் தீ பரவும் அபாயமுள்ளது.

பசுமை தீர்ப்பாயமும், இந்தியத் தொல்லியல் துறையும் குப்பைகளை காட்டுப்பகுதிக்குள் கொண்டு செல்லவேண் டாம் என எச்சரித்துள்ளன. 2025-ஆம் ஆண்டில், தொல்லியல் துறை காரணம் கேட்கும் குறிப்பாணையும், குப்பை கொட்டுவதை நிறுத்தக்கோரிய ஆணையும் பிறப்பித்துள்ளது.

பசுமை தீர்ப்பாயமும், சுற்றுச்சுழல் பாதிப்புகளை காரணம் காட்டியும், தொல்லியல் தளத்தை காரணம் காட்டியும், காட்டுக்குள் குப்பைகளை கொண்டு செல்ல வேண்டாமென வலியுறுத்தி உள்ளது. இருந்தாலும், பெரும்பாக்கம் பஞ்சாயத்து,இந்தச் செயலை தொடர்ந்து செய்து வருகிறது.

SCROLL FOR NEXT