சென்னை,
சென்னையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-ஒவ்வொரு துறை அமைச்சர்களும் தங்கள் துறையில் விரைந்து செயல்பட்டு வருகிறோம். தகவல் தொழில்நுட்பம், பத்திரப்பதிவுத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இணைந்து எப்படி செயல்படுவது குறித்து ஆலோசித்தோம். பத்திரப்பதிவுத் துறையில் தகவல் தொழில்நுட்பம் மூலம் பதிவு செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது. மக்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மூன்று துறைகளும் இணைந்து, பட்டா வழங்குவது, சான்றிதழ் வழங்குவது, முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவற்றை வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தினோம்
இது தொடர்பாக கொடுக்கப்படும் மனுக்கள் 5 நாட்களில் பரிசீலனை செய்யப்பட்டு 15 நாட்களில் முடிவு தெரியும் வகையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை மிதமாக மட்டுமே உள்ளது. மக்கள் அச்சம் அடைய வேண்டாம். தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.பட்டாவை பொறுத்தவரை சிறு சிறு தவறுகள் இருந்தால் வருவாய்த்துறை அதை சரி செய்தால் மட்டுமே மாற்றம் செய்வார்கள். எனவே பதிவு செய்யும் நேரத்திலேயே சரியாக பதிவு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்