திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டத்தில் மாமனார் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வடக்கு விஜயநாராயணம் கிழக்குத்தெருவை சேர்ந்த ஆறுமுகம் (வயது 40), தொழிலாளி. இவரது மனைவி செல்வி. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனமுடைந்த செல்வி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அதேபகுதியில் உள்ள தனது தந்தை ஆவுடையப்பன் வீட்டுக்கு வந்து விட்டார்.
இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் நேற்று முன்தினம் தனது மாமனார் ஆவுடையப்பன் வீட்டுக்கு சென்று பெட்ரோல் குண்டை வீசினார். இதில் ஜன்னல் மற்றும் நிலைகள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்த புகாரின்பேரில் ஆறுமுகத்தை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.