தமிழக செய்திகள்

சென்னையில் பெட்ரோல் விலை 16 காசுகள் உயர்வு

சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் உயர்ந்துள்ளது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.77.29 க்கு விற்கப்படுகிறது.

டீசல் விலையில் தொடர்ந்து நான்காவது நாளாக எந்த மாற்றமும் இன்றி லிட்டர் ரூ.69.59 க்கு விற்கப்படுகிறது.