தமிழக செய்திகள்

நெல்லையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பெட்ரோல் பங்க் மேலாளர் கைது

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

திருநெல்வேலி,

திருநெல்வேலியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெட்ரோல் பங்க் மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

பெட்ரோல் பங்க் மேலாளர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த கணேஷ் சந்திரன் (வயது 57), திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

வேலையை விட்டு நீக்கம்

இவர் பணிபுரியும் பெட்ரோல் பங்கில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 24 வயது இளம்பெண் ஒருவர் வேலைக்கு சேர்ந்தார். ஒரு வாரத்திலேயே அந்த பெண் வேலையை விட்டு நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாலியல் தொல்லை; கைது

இதற்கிடையே அந்த பெண்ணிற்கு கணேஷ் சந்திரன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் போலீசார் கணேஷ் சந்திரனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT