சென்னை,
சென்னை, மதுரை, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, சிவகாசி, பழனி ஆகிய இடங்களில் இபிஎப்ஓ, இஎஸ்ஐசி குறைதீர்வு முகாம்களை நடத்துகின்றன.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பும், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகமும் இணைந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களின் குறைகளுக்கு விரைவாக தீர்வுகாணவும், “நிதி உங்கள் அருகில்" என்ற பெயரில் ஒருங்கிணைந்த பொதுமக்கள் தொடர்பு, குறைதீர் முகாமை நடத்துகின்றன. இந்த முகாம், சென்னை அயனாவரத்தில் உள்ள இஎஸ்ஐசி கிளை அலுவலகத்தில் 2026 நவம்பர் 27 அன்று நடைபெறுகிறது.
மதுரையில் உள்ள முனிச்சாலை, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, சிவகாசி (விருதுநகர் மாவட்டம்), பழனி (திண்டுக்கல் மாவட்டம்) ஆகிய இடங்களில் உள்ள இஎஸ்ஐசி கிளை அலுவலகங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது.
ஈபிஎப்ஓ, இஎஸ்ஐசி உறுப்பினர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோர் தங்களுடைய தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் தொடர்பான கோரிக்கைகள், குறைகள் மற்றும் சந்தேகங்களுக்கு இந்த முகாமில் நேரடியாக தீர்வு காணலாம். பங்கேற்க விரும்புவோர் https://t.ly/nPTt என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து முகாமில் கலந்து கொள்ளலாம்.