தமிழக செய்திகள்

புறா பந்தயம்: 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து வந்து முதலிடம் பிடித்த யூசுப்

லக்னோவில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வரை சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் புறா பந்தயம் நடந்தது.

கோவில்பட்டி,

நெல்லை மாவட்டம் திசையன்விளை ராயல் ரேசிங் பீஜியன் கிளப் சார்பில் லக்னோவில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வரை சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் புறா பந்தயம் நடந்தது.

இந்த பந்தயத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 17 புறாக்கள் பங்கேற்றன.

கடந்த மாதம் 2-ம் தேதி லக்னோவில் இருந்து பந்தயம் தொடங்கியது. இதில் சுமார் 31 நாட்கள் பறந்து கோவில்பட்டிக்கு வந்தடைந்த சையது அகமது இப்ராகிம் என்பவரின் புறாவான யூசுப் முதலிடத்தை பிடித்து அசத்தியது.