தமிழக செய்திகள்

குழாய் பராமரிப்பு பணி:வடகரை பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்

குழாய் பராமரிப்பு பணி காரணமாக வடகரை பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

பெரியகுளம் நகராட்சி வடகரை பகுதியில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனையொட்டி நாளை (திங்கட்கிழமை) மாலை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் 1,2,3,4,5,6,7,8,10 மற்றும் 20 ஆகிய வார்டுகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. வருகிற 8-ந் தேதி வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று நகராட்சி மேலாளர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT