தமிழக செய்திகள்

பிட்டி தியாகராயர் பிறந்தநாள் - மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னையின் தொடக்கக்கால வளர்ச்சியில் பிட்டி தியாகராயர் பெரும்பங்காற்றியவர் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

ஏப்ரல் 27: நம் வேரான நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயரின் பிறந்தநாள்.

மாநகராட்சி மன்றத் தலைமைப் பொறுப்பில் இருந்து சென்னையின் தொடக்கக்கால வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர். எவர் மீதும் வெறுப்புணர்வைக் காட்டாத பண்பிற் சிறந்தவர்.

பார்ப்பனரல்லாதாரின் உரிமைகள், கல்வி வளர்ச்சி ஆகியவற்றுக்காகத் தியாகராயர் ஆற்றிய பணிகள்தான் இன்றும் நம்மை இயக்கும் திராவிட மாடல். அதன் பயணம் மேலும் உறுதியோடு தொடரும்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.