சென்னை,
சென்னையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் பிற்பகல் 3.00 மணிக்கு மேல் மீண்டும் சீரான மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள் விவரம்
கல்லூரி லேன், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, மூர்ஸ் சாலை, கே.என்.கே சாலை, வாலஸ் கார்டன் (1 முதல் 3-வது தெரு வரை), ரட்லேண்ட் கேட் (1 முதல் 6-வது தெரு வரை), சுப்பாராவ் அவென்யூ (1 முதல் 3-வது தெரு வரை), ஆண்டர்சன் சாலை, ஹாடோஸ் சாலை (1 மற்றும் 2-வது தெரு), நவாப் ஹபிபுல்லா அவென்யூ (1 மற்றும் 2-வது அவென்யூ), பைக்ராப்ட் கார்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
பழைய சந்தை, பம்மல் பிரதான சாலை, அப்துல் பாரூக் தெரு, காமராஜர் நெடுஞ்சாலை, தெய்வசிகாமணி தெரு, முத்தமிழ் நகர், கிருஷ்ணா நகர், அரங்கநாதன் தெரு, தேவராஜன் தெரு, சோழன் தெரு, இஸ்ரோ விருந்தினர் மாளிகை, ரேடியன்ஸ், ஜி.இ. நிறுவனம், ராணுவ குடியிருப்புகள், ஏர் இந்தியா, டிஆர்டிஓ, தாஜ் விமான உணவுத் தயாரிப்பு மையம், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், எல்&டி, இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
எனவே, பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்