தமிழக செய்திகள்

சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.

சென்னை,

மின்சாரம் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:-

08.08.2026 சனிக்கிழமை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம்.

சென்னையில் 08.08.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மின் தடை ஏற்படும் இடங்கள்

பெரம்பூர்: திருமலை நகர் பிரதான சாலை, திருமலை நகர் 1 வது முதல் 3வது தெரு வரை மற்றும் விரிவாக்கம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.