தமிழக செய்திகள்

விஜய் அண்ணாவிடம் இதை சொல்லுங்கள்... மெரினாவில் மாயமான மாணவனின் தாயின் கண்ணீர் கோரிக்கை

தேர்தலில் விஜய் அண்ணாவுக்கு ஓட்டு போடுங்கள் என்று என் மகன் என்னிடம் சொன்னான் நானும் விஜய் அண்ணாவுக்கு தான் ஓட்டு போட்டேன்.

சென்னை,

மெரினா கடலில் மூழ்கி உயிரிழந்த பதினோராம் வகுப்பு படிக்கும் சுதர்சன் என்ற மாணவனின் உடல் இரண்டு நாளாகியும் கிடைக்காத நிலையில் உயிரிழந்த சிறுவனின் தாய் தேவகி மெரினா கடற்கரையில் ஊடகங்களுக்கு கண்ணீர் மல்க பேட்டி

தேர்தலில் விஜய் அண்ணாவுக்கு ஓட்டு போடுங்கள் என்று என் மகன் என்னிடம் சொன்னான் நானும் விஜய் அண்ணாவுக்கு தான் ஓட்டு போட்டேன் தயவு செய்து அவரிடம் யாராவது சொல்லி என் மகனை மீட்டு கொடுக்க சொல்லுங்கள் என அந்த தாய் கதறல்

எனக்கு யாரிடம் சென்று இதை கேட்க வேண்டும் என தெரியவில்லை தயவு செய்து யாராவது இதை விஜய் அண்ணாவிடம் தெரியப்படுத்துங்கள் எனவும் அவர் கண்ணீருடன் கோரிக்கை. சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி வேகமாக பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட தாய்க்கு உதவ த.வெ.க நிர்வாகிகள் உடனடியாக களமிறங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.