தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2 முதல் 26-ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப். 6 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது.
தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத் துறை மேற்கொண்டது. இந்தநிலையில் ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. காலை 9.30 மணிக்கு ரிசல்ட் வெளியாக உள்ளது.
மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த ឈប់ យ tnresults.nic.in, dge.tn.gov.in, dge1.tn.nic.in அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். இவை தவிர, மாணவர்கள் பள்ளிகளில் பதிவு செய்துள்ள செல்போன் எண்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.