கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பிளஸ் 2 மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது: தொழிலாளி மீது வழக்கு

போக்சோ வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் மகன் தென்னரசு (வயது 24). இவர் தலைவாசல் பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், 17 வயதான பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து தென்னரசு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்ட தால் அவரது பெற்றோர் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அந்த மாணவி 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த மாணவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து ஆத்தூர் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி தென்னரசு மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.