சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, தமிழக முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் மருத்துவர் ராமதாசுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாண்டு வாழ உளமார வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.