சென்னை
பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டம் வருகிற 29-ந்தேதி நடைபெறும் என அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்து உள்ளார்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் கூட்டாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.
அதில், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வருகிற 29-ந்தேதி (புதன்கிழமை காலை 11 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ப்ளூயன்ஸ் அரங்கில் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
இந்த கூட்டத்தில் பா.ம.க. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.