தமிழக செய்திகள்

பிரதமர் மோடிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து

இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி பிறந்ததினத்தை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;-

வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் 76-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளைப் படைக்கவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT