தமிழக செய்திகள்

பா.ம.க. அரசியல் தலைமைக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு

குழுக்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் உரிய மாற்றங்களை கட்சி தலைவர் மேற்கொள்வார்.

சென்னை,

தலைமைக்குழு கூட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னையில் நேற்று செவ்வாய் கிழமை நடைபெற்றது.

இந்த நிலையில் கட்சியின் பொது செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா, சட்டப்பேரவை கட்சி தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கட்சி வளர்ச்சி பணிகள், எதிர்கால திட்டங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ஆய்வு

பாட்டாளி மக்கள் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், கிளை, பேரூர், நகர, ஒன்றிய, மாவட்ட அளவில் கட்சி நிர்வாகத்தை மறுசீரமைக்க இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் குழுக்களை அனுப்பி ஆய்வு செய்வதென்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டறிந்து, அதனடிப்படையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கட்சி தலைமைக்கு குழுக்கள் அறிக்கை தாக்கல் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

குழுக்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் உரிய மாற்றங்களை கட்சி தலைவர் மேற்கொள்வார்.