சென்னை,
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக 3 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. மீதமுள்ள 15 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று அன்புமணி வெளியிட்டார்.இதன் விவரம் வருமாறு:
பெரம்பூர்: திலகபாமா (இந்த தொகுதியில் தவெக சார்பில் விஜய் போட்டி)
தருமபுரி : சௌமியா அன்புமணி
விருத்தாசலம்: தமிழரசி ஆதிமூலம்,
சேலம் மேற்கு: மு.கார்த்தி
பென்னாகரம்: பாடி வெ. செல்வம்
போளூர்: சி.ஆர். பாஸ்கரன்
திருப்போரூர்: கே.பாலு,
ஜெயங்கொண்டம் : வைத்தி
சேலம் வடக்கு: எஸ். சதாசிவம்
விக்கிரவாண்டி: சி. சிவக்குமார், எம்.ஏ அவர்கள்
சோளிங்கர்: க. சரவணன்,
மயிலாடுதுறை : சித்தமல்லி
உத்திரமேரூர்: பெ. மகேஷ்குமார்,
ரிஷிவந்தியம்: அ.ப. செழியன் அவர்கள்
காட்டுமன்னார் கோயில் (தனி): அன்பு. சோழன்,
முன்னதாக பாமக முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன் விவரம் வருமாறு: கீழ்வேளூர் - ச.வடிவேல் ராவணன் (பாமக பொதுச் செயலாளர்), அம்பத்தூர் - என்.சேகர் (மாநில துணைத் தலைவர் - முன்னாள் நகர் மன்றத் தலைவர்), செஞ்சி - அ.கணேஷ் குமார் (இளைஞரணி தலைவர் - முன்னாள் எம்எல்ஏ) ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிட உள்ளனர்.