தமிழக செய்திகள்

சென்னையில் நாளை பா.ம.க. இளைஞரணி பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.

சென்னை,

சென்னையில் நாளை பா.ம.க இளைஞரணி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பா.ம.க. செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான க.பாலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி பொதுக்குழுக் கூட்டம் நாளை (பிப்ரவரி 10-ந்தேதி) செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.