திருநெல்வேலி,
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம், சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த முருகன் மகன் முத்துகுமார் (வயது 29) என்பவர் போக்சோ வழக்கில் தொடர்புடையவர் ஆவார்.
இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி, மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அவரது வேண்டுகோளின்பேரில் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் சுகுமார் உத்தரவின்பேரில் முத்துகுமார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.