திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில், 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்ற வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012-ன் கீழ் போக்சோ கோர்ட்டு புதிதாக தொடங்கப்பட உள்ளது.
இதற்காக கோர்ட்டு அமையும் இடத்தை தேர்வு செய்து அளிக்க சென்னை ஐகோர்ட்டு மூலம் திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, போக்சோ சிறப்பு கோர்ட்டு, ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் கோர்ட்டு அறை எண்.15-ல் அமைய முதன்மை மாவட்ட நீதிபதி மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்த 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, ஒருங் கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தரைத்தளத்தில் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற அலுவலகம் அருகே அறை எண்.2-க்கு மாற்றம் செய்யப் படுகிறது. வருகிற 26-ந் தேதி முதல் 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தரைத்தளத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் போக்சோ கோர்ட்டு செயல்பட இருக்கிறது.