தமிழக செய்திகள்

போத்தனூர் - சென்னை சிறப்பு ரெயில் வாரம் மும்முறை இயக்கம்

சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று (2-ந் தேதி) மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

சென்னை,

பயணிகள் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு போத்தனூர் - சென்னை இடையே வாரம் மும்முறை சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

போத்தனூரில் இருந்து சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலுக்கு ஜூலை 3-ந் தேதி (நாளை) முதல் ஆகஸ்டு 2-ந் தேதி வரை வாரம் மும்முறை சிறப்பு ரெயில் (வண்டி எண் 06028) இயக்கப்படுகிறது. வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இயக்கப்படும் இந்த சிறப்பு ரெயில் போத்தனூரில் காலை 7.40 மணிக்கு புறப்பட்டு அன்று மாலை 4.45 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலை வந்தடையும்.

மறுமார்க்கத்தில், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து போத்தனூருக்கு ஜூலை 3-ந் தேதி (நாளை) முதல் ஆகஸ்டு 2-ந் தேதி வரை வாரம் மும்முறை சிறப்பு ரெயில் (06027) இயக்கப்படுகிறது. வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் இயக்கப்படும் இந்த சிறப்பு ரெயில் சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரலில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3 மணிக்கு போத்தனூரை சென்றடையும்.

13 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், திருப்பூர், சேலம், மொரப்பூர், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று (2-ந் தேதி) மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.