திருநெல்வேலி மாநகர காவல்துறையில் தலைமை காவலராக (ஏட்டு) பணிபுரிந்த அச்சுதன் என்பவர், பணியின் போது கடந்த 8.9.2024 அன்று உயிரிழந்தார்.
இந்த நிலையில் பணியின் போது உயிரிழந்த காவல்துறையினருக்கு தமிழக காவல் துறையால் வழங்கப்படும் கருணைத்தொகை ரூ.15 லட்சத்துக்கான காசோலையை நேற்று திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய், அச்சுதன் குடும்பத்தினரிடம் வழங்கினார்.