தமிழக செய்திகள்

பணியின்போது இறந்த போலீஸ் அதிகாரி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் காசோலை; நெல்லை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

நெல்லை மாநகர காவல்துறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த தேவபாலன் சாமுவேல் பணியின் போது உயிரிழந்தார்.

நெல்லை,

திருநெல்வேலி மாநகர காவல்துறையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த தேவபாலன் சாமுவேல் பணியின் போது கடந்த 7.3.2026 அன்று உயிரிழந்தார்.

இந்த நிலையில் ஆயுள் காப்பீடாக பேங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து பணியின் போது உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் காப்பீட்டு தொகை ரூ.15 லட்சம் காசோலையை நேற்று, திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய், தேவபாலன் சாமுவேலின் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின்போது போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) விஜயகுமார், பேங்க் ஆப் பரோடா வங்கி பிராந்திய மேலாளர் ஜெய் கிஷன் மற்றும் வங்கி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.