தமிழக செய்திகள்

விஜய் பிரசாரத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக போலீசார் தீவிர ஆலோசனை

விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு தவெகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூரில் நாளை மறுநாள் தேர்தல் பிரசாரத்தை விஜய் தொடங்க திட்டமிட்டுள்ளார். சென்னை பெரம்பூர் எம்.கேபி நகரில் தொடங்கி கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர்,விருகம்பாக்கம் ஆகிய 5 தொகுதிகளில் விஜய் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார். வேனில் இருந்த படி விஜய் பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியானது.

பிரசாரத்தை தொடங்க இருக்கும் விஜய்க்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவது என்பது தொடர்பாக போலீசார் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். விஜய் பிரசாரம் செய்ய உள்ள இடங்களில் 3 ஆயிரம் பேர் கூடுவார்கள் என்று கூறி தவெக சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், ஆனால் விஜய்யை பார்க்க கட்டுக்கடங்காமல் கூட்டம் வந்தால் அதை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்ட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு தவெகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.